தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்ற பிரிப்பு பல்வேறு விதமான இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டில் 285 பள்ளிகள் 272 கல்லூரிகள் மற்றும் 3157 பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன . மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூரியர் / பே டெக்ஸ் / மோசடி வர்த்தகம் / முதலீட்டு மோசடி / மின் கட்டண மோசடி டிஜிட்டல் கைது மோசடி கல்வி உதவித்தொகை ஸ்காலர்ஷிப் மோசடி குறித்த சைபர் கிரைம் விழிப்புணர்வு குறும்பட போட்டியை ஆன்லைன் மூலம் நடத்தியது. பங்கேற்பாடுகள் தங்களின் அசல் குறும்படத்தை கொடுக்கப்பட்ட தலைப்புக்கு இணங்க சமர்ப்பிக்கவும் தங்கள் படங்களை google பாமில் உள்ள இணைப்பில் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் .போட்டியில் கலந்து கொண்டவர்களின் பேடெக்ஸ் மோசடி குறித்த குறும்படத்தை சமர்ப்பித்த சென்னையை சேர்ந்த மகேஷ் குமார் முதல் பரிசையும் ஸ்காலர்ஷிப் மோசடி குறித்த குறும்படத்தை சமர்ப்பித்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பேரிளம் வழுதி இரண்டாவது பரிசையும் மின் கட்டண மோசடி குறித்த குறும்படத்தை சமர்ப்பித்த சென்னையை சேர்ந்த ரவி மூன்றாவது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாவது பரிசு பெற்றவர்களுக்கு முறையே ரூபாய் 30,000 மற்றும் 20 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ஆகியவற்றை ரொக்க பரிசுகளை கூடுதல் காவல் துறை இயக்குனர் சைபர் கிரைம் பிரிவு வாங்கினார்..