உதகையில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.!!

நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன் உட்பட பலர் உள்ளனர்..