திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நேற்று 14.07.2023 ஆம்பூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆம்பூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகன் தியேட்டர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேர்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குமார், குடியாத்தம் பகுதியை சேர்ந்த அலீம் -23 என்ற நபர்களின் வாகனத்தை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என கண்டறியப்பட்டு அவர்களை விசாரணை செய்ததில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட 17 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பான செயல் செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.