வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை..!

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் . இவரது மகன் நவீன் குமார் ( வயது 26 ) இவர் கணபதி உள்ள ஒரு வங்கியில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார் 2 மணி நேரம் கழித்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த கால் பவுன் கம்மல், கால் பவுன் மோதிரம், பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நவீன் குமார் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..