கோவை : மஞ்சள் சாணி பவுடர் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.இதை மீறி சிலர் தங்கள் கடைகளில் சாணி பவுடரை மறைத்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். விஷத்தன்மை கொண்ட இதை குடித்து ஏராளமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.. இதைத் தொடர்ந்து கடைவீதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நேற்று தெற்கு உக்கடம், ஹவுசிங் யூனிட் புல்லு காடு பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சாணி பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக வியாபாரி ஹரிஷ் பாபு (வயது 31) கைது செய்யப்பட்டார் .
இதே போல செல்வபுரம் வேடப்பட்டிரோட்டில் உள்ள புது காலணியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 45) இவரது பெட்டிகடையில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட குட்காவும், சாணி பவுடரும் இருந்தது தெரியவந்தது .இது தொடர்பாக கருப்பசாமி கைது செய்யப்பட்டார் .மேலும் கோவையில் சோதனை நடந்து வருகிறது..