கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி .ரத்தினகிரி ரோட்டை சேர்ந்தவர்.இளங்கோவன் ( வயது 40) இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் (எண் 22 25 )ல் பார் நடத்தி வருகிறார் .நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது பாருக்கு 7 பேர் சென்றனர்.டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு இவர்கள் மது கேட்டனர்.பார் உரிமையாளர் இளங்கோவன் கடை அடைக்கப்பட்டுள்ளது .மது கொடுக்க முடியாது என்றார்.இதனால் ஆத்திரமடைந்த 7 பேரும் சேர்ந்து இளங்கோவனை ஹெல்மெட் , கல் உருட்டு கட்டை ஆகியவற்றால் தாக்கினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய சிவானந்தபுரம் சௌடாம்பிகை நகரை சேர்ந்த வீரபாண்டி என்ற பாண்டி(வயது 22) விநாயகபுரம் தீபக் (வயது 21)காந்திமா நகர் ஹரிஹரன் (வயது 21) கணபதி மாநகர் வைசால் ( வயது 23 ) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மகேஷ் ராஜ், வசந்தகுமார் சரவணன் ஆகியவை தேடி வருகிறார்கள்.இவர்கள் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
மது கொடுக்க மறுத்த பார் உரிமையாளருக்கு உருட்டு கட்டையால் தாக்குதல் – 4 பேர் கைது..!
