பாசி நிதி நிறுவனம் வழக்கு: குற்றவாளி இருவருக்கு 27 ஆண்டு சிறையும் 171.74 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம் – கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றம் தீர்ப்பு!!!
திருப்பூர் பகுதியில் பாசி நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மோகன்ராஜ் கமலவல்லி கதிரவன் இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 58 ஆயிரம் பேரிடம் பணத்தை வாங்கியுள்ளனர் அதாவது ஒரு லட்சம் ரூபாய் வாங்கினால் 25 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் என கூறியுள்ளனர் பாசி நிதி நிறுவனம் கிட்டத்தட்ட 58 ஆயிரம் பேரிடம் மோசடி செய்து உள்ளது இது தொடர்பாக கடந்த 2009 திருப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டது இதனை அடுத்து இந்த வழக்கு சிபிஐ மாற்றப்பட்டது இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று மோகன்ராஜ் மற்றும் கமலவல்லி ஆகியோர் குற்றவாளிகள் எனவும் இவர்கள் இரண்டு பேருக்கும் 27 ஆண்டு சிறையும் 171.74 லட்சம் 50 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது மேலும் 58 ஆயிரம் பேர் மோசடி செய்ததில் 1402 பேர் மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பாக 1402 பேரை தவிர பாதிக்கப்பட்ட மற்றவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நீதிமன்றத்தை அணுகினால் இழந்த பணம் திருப்பி தரப்படும் என தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கதிரவன் இறந்துவிட்டார்