ஷூ போடும் போது உஷாரா இருங்க!! ஷூவிற்குள் மறைந்திருந்த பாம்பு… இணையத்தில் வைரல்.!!

ஷூவில் சிறிய அளவில் பாம்பு ஒன்று இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது ஷூவில் இருந்த பாம்பை வெறும் கைகளால் வெளியே இழுத்து எடுத்துள்ளார்.

வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்துக்காக பாம்புகள் வீடுகளில் புகுந்து விடுகின்றன. எனவே ஹூ போடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது.