கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை அடித்துக் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல் இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக வசித்து வந்தார். இதனால் சித்திரைவேல் வெள்ளலூருக்கு சென்று ராஜனை தட்டி கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருடைய மனைவி மனம் திருந்தி ராஜனை விட்டு பிரிந்து சித்திரவேலுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜன் தனது கள்ளக் காதலுக்கு சித்திரைவேல் இடையூறாக இருப்பதாக கருதினார். இதை அடுத்து அவர் தனது கூட்டாளிகளுடன் சென்று கடந்த 17.5. 2020 ஆம் ஆண்டு அன்று வீட்டில் இருந்த சித்திரை வேலை தடியால் அடித்து கொலை செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து. ராஜன் அவருடைய கூட்டாளிகள் அரவிந்த் குமார், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராஜன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தன்னை தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.