10 கிலோ கஞ்சாவுடன் வடமாநில சமையல் தொழில் கைது

கோவை தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் நேற்று தடாகம் பாரதி நகர் அர்த்த நாரிஸ்வரன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரது பைக்கில் 10 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன .அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சகில் (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் தங்கி இருந்து சமையல் வேலை செய்து வந்தார் .இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.