பெண்ணிடம் மொபட் திருடிய 2 பேர் கைது…

பொள்ளாச்சி சீனிவாசபுரம் , ராஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி சந்திர லீலா (வயது 53)இவர் நேற்று மொபட்டில் பொள்ளாச்சி எஸ். எஸ். கோவில் வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது மொபட்டை காணவில்லை .யாரோதிருடி சென்று விட்டனர் .இது குறித்து சந்திரலேகா பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ஜெய்சக்தி கார்டனைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 48) திப்பம்பட்டி, அண்ணா வீதியை சேர்ந்த காளிமுத்து( வயது 38) ஆகியோரை கைது செய்தார்..இவர்களிடமிருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது