கடலூர் மாவட்டம் ,பண்ருட்டி பக்கம் உள்ள சேத்துப்பட்டு வை சேர்ந்தவர் லியோராஜ் (வயது 42)ஊர்ல தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கோவை வடவள்ளி லிங்கனூர் வீரகேரளம் ரோட்டில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார். அதை பொள்ளாச்சி சின்னாம்பாளையம் மின் நகரை சேர்ந்த கோகிலா ( வயது 35) என்பவர்நடத்தி வந்தார். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் முன்பணம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் வேலைவாய்ப்பு தயாராக உள்ளது என்று கூறினார்.இதை நம்பி யுவராஜ் ரூ2 லட்சத்து 50 ஆயிரத்தை கோகிலாவிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் டெல்லி செல்லுங்கள். அங்கு வெளிநாடு செல்வதற்கு எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தங்களிடம்விமான டிக்கெட் தருவார் என்று கூறினார்.இதை நம்பிய லியோராஜ் வேலைக்கு தேவையான சூட் கேஸ்,துணிமணிகளுடன் டெல்லி சென்றார்.அப்போது யாரும் விமான டிக்கெட் கொடுக்கவில்லை.கோகுலாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதுதவிர்க்க முடியாத காரணங்களால் விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினாராம்.இவரை நம்பி ஏராளமானவர்கள் டெல்லி விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.பின்னர் கோவிலாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவருடன் பேச முடியவில்லை செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது இது குறித்து லியோராஜ் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் போலீசார் கோகிலா மீது மோசடி உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.