புதுச்சேரி பாரதிதாசன் அரசு இன் மகளிர் கல்லூரியில் என். எஸ். எஸ் சிறப்பு முகாம், நடைபெற்றது. இந்த முகாமில் பனை மரத்தின் அவசியம் மற்றும் மாணவிகளுக்கு நினைவாற்றல் பெருக பிரமிட் தியானம் பயிற்சியும் நடைபெற்றது..
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 7 – நாட்கள் NSS சிறப்பு பயிற்ச்சி முகாம் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர்.ராஜு சுகுமார் தலைமையில், புதுச்சேரி என். எஸ் .எஸ் ஒருங்கிணைப்பாளர் திரு. டாக்டர்.சதீஷ்குமார் மற்றும் என் எஸ் எஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருளரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பனை மரத்தின் தேவை அவசியம் குறித்து தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் விளக்கி பேசினார். பிரமிட் விஞ்ஞானி டாக்டர் வரதராஜன் மாணவிகள் நினைவாற்றல் பிரமிட் தியானம் மூலம் அதிகரித்தல் மற்றும் மன அழுத்தம் போக்குதல் பற்றியும் பிரமிட் பற்றியும் விரிவாக பேசினார். முடிவில் கல்லூரி என் எஸ் எஸ் பேராசிரியர் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.நிகழ்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 100 மாணவிகள் பங்குபெற்று பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள், வண்டிமுத்து, சந்திரசூட், டோன்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா. மனித உரிமை இயக்கம் சிவசந்திரன், சிறு சேமிப்பு ஆலோசகர் பிரசாத், மற்றும் கல்லூரி என் எஸ் எஸ் மாணவிகள் செய்திருந்தனர்..