கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாழை தோட்ட பகுதியில் மலைகிராம பழங்குடியின மக்கள் அக்கிராமங்களில் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து கொள்ள இடம் அதற்கான இடம் ஒன்றை வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளிசெல்வம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடம் ஒன்றை ஒதுக்கி அந்த இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக கடை அமைத்துதர நடவடிக்கை மேற்க் கொண்டு அந்த இடத்தில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது. மேலும் மலைவாழ் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலு, கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ சண்முகசுந்தரம், ராயல் என்பீல்ட் டிரஸ்ட் நிறுவனத்தார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர்கள் இரா.சே அன்பரசன், பாலுசாமி, உதயநிதி ரசிகர் மன்ற மகேந்திரன், பாண்டியராஜன், பெரியசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், இளங்கோவன், பாலு மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் . இந்த துரித நடவடிக்கையால் மலைவாழ் பழங்குடியின மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..