விருந்தில் மோடிக்கு பிடித்த சைவ உணவுகள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பு முடிந்த பிறகு இரு தலைவர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளனர் என தெரிவித்தன.பத்திரிகையாளர் சந்திப்பு அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியை முக்கியம் என நாங்கள் கருதுகிறோம். மோடியும் அவ்வாறே நினைக்கிறார் எனக்கூறினார்.எடுத்துக்காட்டுஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் கூறுகையில், மோடியின் வருகை இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும்.
21ம் நூற்றாண்டின் தலைசிறந்த உறவாக இருக்கும். தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக உறவை கட்டமைக்கும் பைடனின் முயற்சியை உலகிற்கு எடுத்துக்காட்டும். இந்தியா அமெரிக்கா இடையிலான உறவானது, இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
மோடியின் அமெரிக்க வருயைானது, சீனாவை பற்றியது அல்ல என்றார்.ஒப்பந்தங்கள் மோடியின் இந்த பயணத்தில், பாதுகாப்பு சாதனங்கள் விற்பனை , உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் சார்ந்தும், தொழில்நுட்பங்கள் சார்ந்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக்கூடும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான பாதுகாப்புத்துறை சார்ந்த வர்த்தகம் கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ரஷ்யாவை மட்டும் சார்ந்து இருக்காமல் பல நாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் வாங்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.ஜி.இ.- எம்.414′ வகை இன்ஜினை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தத்திற்கு பைடன் மற்றும் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மோடியின் அமெரிக்க பயணத்தில், வல்லரசு நாடுகளின் ராணுவங்களில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும், அதிநவீன தொழில்நுட்பம் உள்ள ‘ எம்.க்யூ.,-9 பிரிடேட்டர்’ எனப்படும் ‘ட்ரோன்’களை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.இதனை தவிர்த்து, விண்வெளி ஆய்வு தொடர்பான, அமெரிக்கா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைவதற்கான அறிவிப்பு வெளியாகலாம். 2024 ல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசாவுடன் இணைந்து கூட்டுப் பணியை மேற்கொள்வது மற்றும் அமெரிக்காவின் மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவில் 2.75 பில்லியன் டாலர் மதிப்பில் புதிய செமி கண்டக்டர் ஆலை அமைப்பது குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும். கல்வித்துறையில் பரிமாற்றம், விசா பிரச்னை மற்றும் தூதரகங்கள் குறித்தும், ஜி20 மாநாடு நிகழ்ச்சி நிரல்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பின் போது, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.உலகளவில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவுடன் உறவை ஆழப்படுத்த பைடன் முயற்சி செய்து வருகிறார். இதற்கு முன்னரும், குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இரு தலைவர்களும் சந்தித்து பேசி உள்ளனர்.மோடியை அரவணைக்கும் முதல் அதிபர் ஜோ பைடன் அல்ல. இதற்கு முன்னர், டொனால்ட் டிரம்ப் , ஹூஸ்டனில் இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் ‘ஹவுடி மோடி’ மோடி கலந்து கொண்டார். அதேபோல், ஆமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் மோடியுடன் டிரம்ப் பங்கேற்றார்.மேலும் பல உலக தலைவர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஜூலை மாதம் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்..