செயலி மூலம் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பைக் – செல்போன் பறிப்பு..!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள தலை குந்தா, காந்திநகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் அருண் ( வயது 29) இவர் சரவணம்பட்டி, இ.பி. காலனியில் அறை எடுத்து தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு ” கிரிண்டர் ” ஆப் மூலம் ஒருவர் அறிமுகமானார். அவர் அருணை ஓரினச் சேர்க்கைக்கு ஆசைவாரத்தை காட்டி காளப்பட்டி ரோடு, மகாநகர் காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்தார். அருண் அங்கு சென்றார். அப்போது அங்கு 3 பேர் நின்று கொண்டிருந்தனர் . அவர்கள் அருண் உடைய செல்போனை வாங்கி பணம் ஜி பே செய்யுமாறு கூறினார்கள். அவர் மறுத்ததால் அவரை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினார்கள். பின்னர் அவரிடம் இருந்த பைக்- செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து அருண் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி வழக்கு பதிவு செய்து 3 ஆசாமிகளை தேடி வருகிறார்..