மேம்பாலம் தடுப்புச் சுவரில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஹரிஹரன் ( வயது 27 )இவர் நேற்று கோவை திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பங்கு சந்தைக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் ஹரிஹரன் படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..