சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம் ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும்.
பைக் டாக்ஸிகள் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
பைக் டாக்ஸி என்பது தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்கும் விஷயம் அல்ல. ஒன்றிய அரசுடன் இணைந்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம். ஒன்றிய அரசு ஏற்கனவே பைக்குகளை வணிக ரீதியாக பயண்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. அது இந்தியா முழுவதும் பொருந்தும். அதேபோல் நீதிமன்றங்களில் பல்வேறு விதமான கருத்துகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இது குறித்து ஆய்வு செய்ய உயர்அலுவலர்களை அமைத்து பணிகள் துவங்கப்பட்டுள்ளது. காரணம் பைக் டாக்ஸி என்பது இன்றளவில் பரவளாக இந்தியா முழுவதும் எல்ல இடங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்திலும் கடந்த ஆட்சி காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.
அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இந்த பணியை கையில் எடுத்துள்ளது. வாடகை இல்லாத வாகனங்களில் ஒருவர் வாடகைக்கு பயணம் செய்வது சட்டரீதியாக ஏற்றுகொள்ளப்படாது. எனவே ஏதேனும் சிறிய விபத்து ஏற்பட்டாலும் அதற்கு நிவாரணம் தேடும் நேரத்தில் நீதிமன்றத்தில் அது மறுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஆய்வு செய்து அதனை எப்படியெல்லாம் நடைமுறைபடுத்தலாம் என்ற நோக்கத்தில் செயல்பட்ட்டுகொண்டிருக்கின்றோம்.
மற்றொரு புறம், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் சார்பாக இதற்கு எதிர்ப்பும் உள்ளது. நேற்று இதற்கான ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த சூழலில் இதில் பயணிக்க கூடிய பயணிகளில் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக அவற்றை ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
பைக் டாக்சியில் பயணிப்போர் இறந்தால் அவர்களுக்கு காப்பீடு வழங்குவதில் பிரச்சனை உள்ளது. காப்பீடு இல்லாமல் பைக் டாக்சிகள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே விதிகளின்படி செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவே உத்தரவிட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.