கோவை மாவட்ட த.மு.மு.க. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்தும் இறைத்தூதர் குறித்தும் ஒருவர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் .மேலும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறு பதிவு செய்துள்ளார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சேர்ந்த நந்தகுமார் ( வயது 32) என்பவர் தனது முகநூலில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர் .கைது செய்யப்பட்ட நந்தகுமார் பாஜக கட்சியின் ஊத்துக்குளி பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.