ஓடும் ரயிலில் பயணிகளிடம் பாஜக மண்டல நிர்வாகி தகராறு – நடுவழியில் இறக்கம்..!

கேரள மாநிலம் திருச்சூர் பா.ஜ.க .மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் அஜிஸ் .இவர் நேற்று பெங்களூரில் இருந்து திருச்சூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் சக பயணிகளுடன் அஜிஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிக்கெட் பரிசோதரும் ,ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அவரை கோவை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.கோவை ரயில்வே போலீசார் அவரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிவிட்டு மற்றொரு ரயிலில் அனுப்பி வைத்தனர்.