கோவையில் வரும் 31ம் தேதி பா.ஜ.க சார்பில் பந்த் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
‘கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக அரசு ஆண்டபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது கோவையில் தற்பொழுது நடக்க இருந்த சம்பவம் அதிஷ்டவசமாக நடக்கவில்லை. கேஸ் சிலிண்டர் வெடிப்பு தான் காரணம் என கூறினார்.
ஆனால் அதுதான் இல்லை.பா.ஜ.க அலுலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் திமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தீர்கமான பாடத்தை கற்று இருக்க வேண்டும் ஆனால் கற்க வில்லை .ஓட்டு மட்டுமே குறிகோளாக கொண்டுள்ளனர். எங்களுக்கு வந்த தகவல் படி ஒன்றறை கிலோ வெடிபொருள்கள் கிடைத்துள்ளது. கொங்கு நகரின் தலைநகராக கோவை உள்ளது. வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெற உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
பயங்கர வாதத்திற்கு அடிபணிய மாட்டோம் என்பதை, இந்த 12 மணி நேர பந்த் மூலம் காட்ட வேண்டும். இந்த நேரத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு வேண்டுகோள். எல்லா இஸ்லாமியர்களும் பயங்கரவாதிகள் இல்லை. இஸ்லாமிய மக்கள் இந்த பந்திற்கு ஆதரவு தர வேண்டும் தெரிவித்தனர்.