வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் கைது: பெண் உள்பட 2 பேர் தலைமறைவு லாக்கரில் இருந்த ஒரிஜினல் நகைகளை பாக்கெட்டிலிருந்து எடுத்து போலி நகைகளை வைத்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்துக்கு வலை கேரளா பூர்வீகமாக கொண்ட ஐ சி எல் ஃபின்கார்ப் நிறுவனம் ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பதிவாகியுள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. ...
திருக்கழுகுன்றம்: தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ...
உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் வடநாட்டு பணியாளர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் இன்று காலை பிணமாக கிடந்தது குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு ...
பயங்கரவாதம் தொடர்பாக சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ருசிரா காம்போஜ், உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான உண்மையான மற்றும் ஆதார அடிப்படையிலான பட்டியலின் முன்மொழிவுகள் ...
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று என்பது இரண்டு அலைகளாக மக்களை பெரிதும் வாட்டி வதைத்த நிலையில் மூன்றாம் அலை பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்களும் , அரசியல் ...
பீகாரில் நடந்துள்ள அரசியல் மாற்றம் பாரதீய ஜனதாவை பொருத்தவரை தேசிய அரசியலில் அவர்களுக்கு பின்னடைவு தான். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலே பீகார், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ...
புதுடெல்லி: முஹர்ரம் தினத்தையொட்டி ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நினைவு கூர்ந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகங்களை நினைவுகூரும் நாள் இன்று. சத்தியத்தின் மீதான அசைக்க முடியாத ஈடுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான போருக்காக அவர் நினைவு கூரப்படுகிறார். சமத்துவம், சகோதரத்துவம் ...
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடுங்கள்.கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: 75வது சுதந்திர திருநாள் ...
கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் மதிமுக கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கலந்து கொண்ட பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ...