தமிழக அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளது என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வுரிமை மாநாடு 3 நாட்களுக்கு நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பிரதமரின் கிசான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் ...
கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். கும்பகோணம் அருகே தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.கடந்த 1971 ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி சிலை, நடராஜர் சிலை,கோலு அம்மன் சிலை உட்பட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டது. ...
வாவ்! சூப்பர்!! இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்த்தை பெற்றார் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேஷ்.!
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம். அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், 2500 புள்ளிகளை பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். இந்தியாவிலிருந்து ...
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக டெல்லிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஆட்சி மாற்றம் அரசியல் ...
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 44வது சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த மாதம் 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், முதல்வர் ...
பர்மிங்கம்: தனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராஃபை பெற உள்ளதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். அவர் நடப்பு காமன்வெல்த்தில் தங்கம் வென்றுள்ளார். 26 வயதான நிகத், கடந்த மே மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், காமன்வெல்த்தில் 50 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் ...
இல்லம்தோறும் தேசியக் கொடி திட்டம் கடை, கடையாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தேசியக்கொடி வழங்கினார். இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும், இத்திட்டம் மூலம் வீடுகளில் ஏற்றப்படும் கொடி இரவிலும் பறக்கலாம்” என்று பா.ஜ.க ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரில் இருந்து இக்கரை போளுவாம்பட்டி செல்லும் வழியில் உள்ளது தென்னமநல்லூர் கிராமம். இந்த ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். இவர்கள் விளைபொருட்களை காலை வேளையில் வரும் பஸ்களில் ஏற்றி உழவர்சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக ...
சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை வழங்கப்படும் என சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படஉள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் ...