கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா நேற்று ரத்தினபுரி லட்சுமிபுரம், டெக்ஸ் டூல் பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படும் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து சோதனை செய்தார் . அவரிடம் 2.5 கிராம் மெத்தம்பேட்டமின் ” என்ற உயர் ரகபோதை மருந்து மற்றும் கத்தி, பணம் ரூ. ...

கோவை அருகே உள்ள மாவுத் தம்பதி ஊராட்சி, வாளையார் அருகே உள்ள ஓடையில் மனித கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதாகவும் ,அவை கேரளாவில் இருந்து ” செப்டிக் டேங்க் ” சுத்தம் செய்யும் லாரியில் கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் மனித கழிவை கொட்டும் வாகனங்களை கையும் களவுமாக பிடிக்க ஊராட்சி மன்றம் – நிர்வாகத்தினர் ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனைசெய்யப்படுவதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் சூலூர் போலீசார் இருகூர் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மகன் விஷ்ணு பிரசாத் ( வயது 25) என்பவரை கைது செய்தனர். ...

பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். ‘ஸ்வாபிமான்’ திட்டத்தின் கீழ், புதுடில்லி அசோக் விஹாரில் குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பேச்சின் போது மோடி, நாடு முழுவதும் ஏழைகளுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை ...

கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் , பெரியசாமி வீதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் அன்வர் பாட்ஷா ( வயது 25 )இவரும் குனியமுத்தூர் அனுப்பர்பாளையம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த பயாஷ் அகமது (வயது 27) ஆத்துப்பாலம்,போத்தனூர் ரோடு வெங்கடேஸ்வரன் ( வயது 25) ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று மது குடித்துவிட்டு புத்தாண்டு ...

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருடன் பேசிய ‘யார் அந்த சார்?’ என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 29ம் தேதி ராமநாதபுரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. ...

இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் பலர் கிழக்கு இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீலாம்பதி என்ற பழங்குடி கிராமம் உள்ளது.இங்கு வசிப்பவர் பொன்னுசாமி ( வயது 51 )விவசாயி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு ...

சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. தற்போது மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் மற்றும் ஸ்பார்ட் ...

விழுப்புரம்: பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம், என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜன.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ...