அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, எடப்பாடி கே பழனிசாமி ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஓபிஎஸ் விடுத்த அறிவிப்பில், அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் ...
டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் ...
பத்திரிகையாளர் நல நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் மாற்றுக்கருத்து ...
சென்னை : ”வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு, ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படாது,” என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டையில், 20 கோடி ரூபாய் செலவில், 140 இடங்களில் நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின் துறை அமைச்சர் ...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2வது முறையாக இன்று விசாரணை நடத்த உள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை சோனியா காந்தி விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள், போராட்டம், எதிர்ப்பு,ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, இன்று ராஜ்காட் பகுதியில் யாரும் போராட்டம் ...
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே, முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி செல்ல முடியவில்லை. குடியரசு ...
சென்னை : அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை டான்சி வழக்கு மூலம் அலற வைத்த ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கும் அக்னிப்பரீட்சை வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் முதல்வர் பதவி பறிபோனது. அப்போது முதல்வர் ஆனவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இன்று, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு ...
அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...
சென்னை: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். ...