திருவனந்தபுரம்: கேரளாவில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் சமீப காலங்களில் கொரோனா, டெங்கு , பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், தற்போது குரங்கு அம்மை என பொதுமக்களை மிரட்டி வருகிறது. கேரள அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து குரங்கு அம்மை நோயை பரவ விடாமல் தடுக்கும் முயற்சியில் ...

கோவை போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் உள்ள சிறுவாணி வனப்பகுதியில், இரண்டாவது வாரம் வரை கன மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறுவாணி அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இம்மாத துவக்கத்தில் இருந்தே கன மழை பெய்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக, 100 மி.மீ.க்கு அதிகமாக மழை பெய்ததால், ...

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தல் 3 இளைஞர்கள் கைது – 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்… கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் காத்திருந்தனர். ...

சேலம் கோட்டத்தில் முதல் முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு (டிடிஇ) கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:12674) டிக்கெட் பரிசோதகர்களுக்கு நவீன கையடக்கக்கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகளின் விவரங்களை விரைவாக ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைத்தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட ...

நமது நாட்டின் சுதந்திரதினம் வரும்போது ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை மக்கள் அனைவரும் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து மூவர்ணக் கொடி இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. சுதந்திரதினம் தொடர்பாக பிரதமர் மோடி ...

புதுடெல்லி: திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் ஒருமித்த சம்மதத்துடன் இருந்த உறவின் பேரில் கர்ப்பமடைந்துள்ளார். கர்ப்பம் குறித்து அவருக்கு கடந்த ஜூன் மாதம் தெரியவந்துள்ளது. உடனே அவர் கருக்கலைப்பு செய்துகொள்ள மருத்துவர்களை நாடியுள்ளார். ஆனால் திருமணமாகாதவர் என்ற காரணத்தை ...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது, கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ...

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து ...