சேலம் மாவட்டம் வீரபாண்டி இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2010 ஆண்டு உயிரி உரங்கள் தயாரிக்கும் சன் பயோமினியூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.65 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை ...

பாரதியார் பல்கலைகழகத்தில் இன்று 37 வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றுள்ளது. படித்து முடித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக வீடியோ காட்சிகளும், புகைபடங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றது. பல்கலை கழக நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளை கோயமுத்தூர் ...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இருப்பினும் மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. ...

வடகோவை – பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலை சோதனை செய்தனர். அவர் ஸ்வெட்டர் ...

கோவையை அடுத்த பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் .இவரது மகன் முருகவேல் (வயது 39) இவர் பீடம்பள்ளி ஸ்ரீராம் கார்டனில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது ரஞ்சிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.நேற்று அவர் தனது ஒர்க்ஷாப்பில் இருசக்கர வாகனத்தை தண்ணீர் அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ...

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது19) இவர் கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விற்பனை யாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பள்ளிக் கூடம் சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை . இதனால் ...

கோவையில் 4 மாதத்தில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது .போலீஸ் கமிஷனர் தகவல்… கோவை: கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பது, விற்பது, கடத்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து ...

பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் ...

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த ...

திருப்பூரில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் ஒன்றாக வாழ்ந்த பெண்ணை மதம் மாற்ற வற்புறுத்தி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவர் கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதம் வாழ்ந்த நிலையில், பவித்ராவை மதம் மாற்ற ...