கோவை : கோவையில் கஞ்சா போதையில் பொதுமக்களை அரிவாளால் துரத்தி துரத்தி வெட்டிய 5 இளைஞர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரூடி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ...

திமுகவின் தீவிர கொள்கை பிடிப்பாளரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்துள்ளார். திமுக தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தபோதும் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகிகளாக இருக்கும் பல தலைவர்களின் மகன்களுக்கு எம்.எல்.ஏ ...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு ...

திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார். கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ...

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி உணவு பொருட்கள் வரை அனைத்தின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ...

சென்னை: ஆன்மிக வழி அரசு என்று ஆதீனகர்த்தர்களும் அடிகளார்களும் பக்தர்களும் பாராட்டும் வண்ணம் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருப்பதுடன், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரைநூற்றாண்டு கால சமூகநீதிக் கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் கூடுதல் கவனம் செலுத்திச் செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு என்றும் ஓராண்டு சாதனையை பெருமிதத்துடன் ...

திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்தும், தனது தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டொரு நாளில் பாஜக மாநில ...

சென்னை / தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஓட்டலில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ‘சிக்கன் ஷவர்மா’ கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். அண்மையில் கேரளாவில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். ...

தோடர், இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விளக்க குறிப்பில் தகவல், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டதில், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத்தொகை ...

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு என அதிகாரபூர்வ அறிவிப்பு. சீனாவின் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த 19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விளையாட்டு போட்டியை ஒத்திவைப்பதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் செப்டம்பர் ...