சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மே இறுதிவரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. 6 முதல் 9ம் வகுப்பு மே மாதம் 13ம் தேதி வரை ...

சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்ய தமிழக முடிவெடுத்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% ...

தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக முன்பதிவில்லாத பயணிகள் ரயில், முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து மீண்டும் ரயில் சேவைகளை கொரோனாவிற்கு முந்தைய நேர அட்டவணைப்படி இயக்க ...

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ...

நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர். இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ...

தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 300 பகுதிநேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் 2000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. . தீப்பெட்டி உற்பத்திக்கு மூலப்பொருட்களாக ...

டெல்லி: ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகருமான தலீப் சிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தில் இந்திய – ரஷ்யா இடையிலான ...

தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ...

புதுடெல்லி: 4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணரான் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டதாக கல்யாணரான் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ...