சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. 2 மணி ...

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 447 ஆக ...

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயா் விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இது போன்ற நபா்களை கோயிலில் இருந்து வெளியேற்றினால் தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது. சில கோவில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு ...

சசிகலாவை கோடநாடு பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை ...

மத்திய நிதித்துறை அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலகவங்கி வருடாந்திர கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டங்களை முடித்துக் கொண்டு புறப்படும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியா ...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வரும் நிலையில் நேற்று சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தனிப்படை போலீசார் கேட்டதாகவும் அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதில் கூறி வருவதாகவும் ...

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மனு தாக்கல் செய்த மாணவிகளில் இருவர் பொதுத்தேர்வை எழுத ஹிஜாப் அணிந்து ...

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. டெல்லி, கேரளா, ஹரியானா ...

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அங்குள்ள பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ...

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் ...