சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி உறவினர் சந்திரசேகர்; அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 500 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாக வைத்து எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தை, ராமநாதபுரம் மாவட்டம், கீழமுடிமன்னார் ...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் புரட்சியாளர்களாக மாறியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இலங்கையே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது. ...
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1600 கோடி ரூபாய் மூலம் பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக 14 தொழிலதிபர்கள் மீது வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தன்னிடமிருந்த ...
ஜெனிவா, ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள் தொகை குறித்த சமீபத்திய கணிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் அதிகரிக்க கூடும் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது. மேலும், இது இன்னும் 60 வருடங்களில் சுமார் 10.4 ...
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேல் பிரமாண்ட வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!
புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி, நேற்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் ஓர் புதிய 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இந்த சின்னம் முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது. நான்கு சிங்க முகம் ...
சென்னை: எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி உள்ளார். ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார்.. இதற்கு நடுவில் கட்சியின் நிலைமை இனி என்னாகும் என்கிற அக்கறை கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து OPS நீக்கம் – தீர்மானம் கொண்டு வந்தார் நத்தம் விஸ்வநாதன்! எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையை ஏற்க ...
கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 32, ஆயிரத்து492 ஆக அதிகரித்தது. நேற்று கோவை மாவட்டத்தில் 145 பேர் கொரோனா பாதிப்பு இருந்து குணமடைந்தனர். இதனால் இதுவரை 3, லட்சத்து ...
கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் 22-ந் ...
கோவை துடியலூரைச் சேர்ந்தவர் முகமது (வயது 35) டிப்ளமோ படித்தவர் .சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவர். ஒருமனிதனின் முகத்தை பார்த்ததும் அப்படியே வெள்ளை பேப்பரில் 10 நிமிடங்களில் வரையும்ஆற்றல் படைத்தவர்.இவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:-நான் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறேன்.பூங்காக்கள்,கண்காட்சி,திருவிழாக்கள் போன்ற ...
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஒ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் மற்றும் கே.பி. முனுசாமியை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. ...