சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா என்பன உள்ளிட்ட 4 கேள்விகளுக்கு பதில் விரிவான விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொதுக் குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இவரது மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பு, ...

கோவை: கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு வரி விதிப்புதாரருக்கும் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான சொத்து வரிக்கேற்ப, மாதத்துக்கு ரூ.10 முதல், 50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; ஆண்டுக்கு, 120 முதல், 300 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், 5.22 லட்சம் வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் திடக்கழிவு ...

கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சி பொறுப்பில் வந்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்று வரும் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் மற்றொரு புதிய கிளை நிலையமான ராஜயோக தியான நிலையத்தை சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள ஸ்கவுட் பில்டிங் அருகே 10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிலைய பொறுப்பு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்துவரும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு துவங்கி கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் வால்பாறை கூழாங்கல் ஆறு,நடுமலை ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை ...

எறும்புகளிலேயே சிவப்பு நிற எறும்புகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நறுக்கென்று கடித்து வலி தருவதோடு, கடித்த இடத்தில் சிவப்பாக எழும்பச் செய்துவிடும். இந்த எறும்புகளை பார்த்து நாம் ஒதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான், ஒடிசாவில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக சிவப்பு எறும்பு மாறி உள்ளது. என்ன, எறும்பு உணவா?’ என வியப்பாக இருக்கிறதல்லவா? எறும்பு சட்னி ...

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். அதன் இன்றைய மதிப்பு சுமார் 271 கோடி ...

தவறான சிகிச்சையால் பார்வையிழந்த சிறுவனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் அர்ஜுனன். 2002-ல் 2-ம் வகுப்பு படித்தபோது, தளவாய்புரத்தில் மதுரை தனியார் கண் மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாமில் கலந்துகொண்டார். அவருக்குப் பார்வைக் குறைபாடு ...

சென்னை: தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அந்த 20 புதிய அரசுக் கல்லூரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது உயர்கல்வித்துறை. எந்தெந்த ஊரில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இங்கே தொகுத்துள்ளோம். அதில் உங்கள் மாவட்டமோ ஊரோ ...

மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருக்க கூடிய முக்கியமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் ...