சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 13ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் மாணவர்களை சேர்க்கும் பணியும் தொடங்கியது. தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் ...
கா்நாடகத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மஜத தோல்வி அடைந்தது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2-ஆவது முறையாக கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோந்தெடுக்கப்பட்ட பாஜகவின் நிா்மலா சீதாராமன், கே.சி.ராமமூா்த்தி, காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ...
கோவை: கோவையில் அரசுப் பொருள் காட்சி சனிக்கிழமை (ஜூன் 11) தொடங்க உள்ளது. இதையடுத்து ஏற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கோவை சிறைச் சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஆண்டுதோறும் பொருள்காட்சி நடைபெறுவது வழக்கம். கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருள் காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான பொருள் காட்சி ...
கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விமானம் ஏற செல்ல வேண்டிய வழி உள்பட பல்வேறு உதவிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு வழங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் கோவை சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து ...
வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாத கடைசி சனி, ஞாயிறு தினங்கள் (ஜூன் 25,26ம் தேதிகள்) விடுமுறை தினங்களை அடுத்து ஜூன் 27 திங்கட்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை ...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பள்ளி திறக்கும் தேதி மாற்றப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை ஒன்று முதல் 10ம் ...
2047 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் தலைவராக இந்தியா மாற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58வது நிறுவன நாள் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு ...
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசியும், மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆள் ...
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வு நடைபெற்றுவரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் ...
குரங்கு அம்மை நோய் காற்றின் மூலம் பரவுமா என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது ...