இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டாடா என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி கடந்த 2019 ஆம் ஆண்டு அகடோபர் மாதம் பிசிசிஐ யின் தலைவராக பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் கங்குலி பிசிசிஐ தலைவரானதை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள், நாட்கள் செல்ல செல்ல, கங்குலியின் செயல்களால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதாவது கங்குலியின் தலையீட்டால் ...
கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயை கடந்து உச்சத்தில் இருந்தது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று (2-ம் தேதி) கோயம்பேடு சந்தையில், தக்காளி ...
கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சொந்தமான 228 சிலைகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, அா்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய முயற்சியின் காரணமாக இந்தப் பெருமைக்குரிய விஷயம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் ...
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை அனைத்தும் இன்றைய தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.25 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகைக்கும், மீதமுள்ள ரூ.61ஆயிரத்து 912 கோடி மத்திய செஸ் வரி வசூலித்ததில் இருந்து நிலுவைத் தொகை ...
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “நடப்பு பருவமழை காலத்தில் மழைஅளவு சராசரி 103% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ...
ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் ...
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. மொத்தம் 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ...
சென்னை : ”தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்தியாவில், தினசரி ...
வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை மேலாளராக உமா மகேஸ்வரி என்ற பெண் 2018-2019=ம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.97,37,000 பணத்தை மோசடி செய்து அவர் சுருட்டியிருக்கிறார். இது குறித்து, துறை உயரதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதையடுத்து, குடியாத்தம் வங்கியில் ...
திருச்சி மணப்பாறையை அடுத்த அத்திக்குளத்தில் காதலிக்க மறுத்ததால் 11ம் வகுப்பு மாணவிக்கு 10 இடங்களில் சரமாரியாக கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர், திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். ...