அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், வேறு சில நபர்களும் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக குற்ற ...

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்பசாமி, மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- முன்னாள் பாரத பிரதமர் குறித்து யூடியூபர் பரத் பாலாஜி என்பவர் அவதூறாக கருத்தை பரப்பி வருகிறார். நாட்டில் 17 ...

கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை சூப்பிரண்டாக பணி புரிந்த சசி மோகன் பதவு உயர்வுபெற்று கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலைரேஸ்கோர் சில் உள்ள டி. ஐ.ஜி ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சென்னை தலைமை இடத்து ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார் .இதை தொடர்ந்து கோவை சரக டிஐ.ஜி யாக பதவி வகித்து வந்த சரவண சுந்தர் ஐ ஜி.யாக பதவிஉயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை பொறுப்பு ...

கோவை மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம் பதி பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 51) நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் இவரது தோட்டத்தில் உள்ள வீட்டினுள் புகுந்தனர். தனியாக இருந்த காளீஸ்வரியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினார்கள். பின்னர் இவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பீரோவில் இருந்த நகை,பணத்தை ...

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளன .இது 2023 ஆம் ஆண்டை விட 20 சதவீதம் குறைவு. அனைத்து கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .பாலியல் ...

கோவை, தெற்கு உக்கடம் ரோஸ் அவென்யூவை சேர்ந்தவர் சாலி சலீம் (வயது 65) இவரது மனைவி ரசிதா பேகம் இவர் கடந்த 27ஆம் தேதி தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தார். வீட்டில் கணவர் சாலி சலீம் மட்டும் தனியாக இருந்தார்.நேற்று அவருக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ...

கோவை ரத்தினபுரி ,சம்பத் விதியைச் சேர்ந்தவர் முத்துவேல் .இவரது மகள் சிந்திகா (வயது 23 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரை காதலித்து வந்தாராம். இது சிந்திகாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிந்திகா கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்து திடிரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தந்தை முத்துவேல் ...

கோவைமாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியிலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியிலும் புதிதாக புறக் காவல் சாவடி தொடங்கப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் திறந்து வைத்தார். குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும்இந்த புறக்காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் , சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் நேற்று சின்னவேடம்பட்டி, ஏரி பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்த சோதனை செய்தனர். அவரிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் ...