இளைஞரை கொலை செய்து தலையைத் தூக்கிச் சென்ற மர்ம கும்பலால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள தனியார் எம்பிராய்டரிங் நிறுவனத்தில் இருநாள்களுக்கு முன்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் கே.புதூர், மூன்று மாவடி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலியில் ...

கோவை: கோவையை கலவர பூமியாக்க திமுகவினர் முயற்சிப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். கோவை மாநகர், கோவைப்புதூரில் திமுக பிரமுகர்கள் வாகனத்தை சிறைபிடித்த, அதிமுக செய்தித் தொடர்பாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அதிமுகவினர் 10 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குனியமுத்தூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதைக் கண்டித்து, அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் ...

சென்னை: மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலையை கருதி சிறப்பு நேர்வாக ரூ.3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ...

2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது சிரோன்மணி என்று வர்ணிக்கப்படும் ஒரு ‘மர்ம யோகி’யின் அறிவுரையை ஏற்றே தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார் ...

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முதல்வராக மம்தா செயல்பட்டு வருகிறார். இவருக்கும் மேற்கு வாங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதிவேற்ற நிகழ்ச்சியிலேயே ஆளுநரின் சில கருத்துக்கள் இவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் பலவித ...

குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ...

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த ...

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதால், அவரது பதவிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், நவாஸ் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ...

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் கமங் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு கடந்த 6-ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, ...