நாகப்பட்டினத்தில் இருந்து கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள், கடல் குதிரைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாகை அக்கரைபேட்டை மாரியம்மன்கோயிலுக்கு தென்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள பழைய ...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெ.கரிகால பாண்டியன் ( மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ) பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், புத்தாடைகளும் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களும் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கர்ப்பிணிப் பெண்களுக்கும் புத்தாடை மற்றும் ஊட்டச் சத்து மிக்க ...
சென்னை: ‘கேரளா, தமிழகம் இடையே நீண்ட கால உறவு தொடர்கிறது’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நுாலான, ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் வெளியீட்டு விழா, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், நுாலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் கேரள முதல்வர் ...
வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை: தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, ...
பிரதமர் மோடி , முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டின் ...
மதுரை மாநகராட்சியில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. வரி வசூல் விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில், 2010ம் ஆண்டு முதல் 2022 வரை, வசூல் செய்யப்பட்ட வரித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள தொகை விவரங்களை ...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் வீட்டில் காலையில் எழுந்ததும் புத்தாடை அணிந்து தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தார் ஸ்டாலின். வீட்டில் இருந்த மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு ...
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றால் உலக நாடுகள் சில நிபந்தனைகளை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க கடந்த வியாழக்கிழமை அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி 5 நாட்களாக உக்ரைன் நாட்டில் கடும் போர் நிலவி ...
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை ...