சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கொடை வெயிலின் கடுமையான வெப்ப அலையிலிருந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் விதமாக ஏர்வாடி முக்கு ரோடு , பேருந்து நிறுத்தம் , வள்ளல் சீதக்காதி சாலை, கிராம நிர்வாக அலுவலகம், மீன் மார்க்கெட், இந்து பஜார் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ...
இரு தரப்பினர் இடையே மோதல்: காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக புகார்..! மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் அருகே ‘மோர்பண்ணை’ மீனவ கிராமத்தில் சிங்காரம் மனைவி காளீஸ்வரி என்பவர் குடும்பத்திற்கும் மோர்பண்ணை கிராம நிர்வாக செயலாளர் குடும்பத்திற்கும் இடையே ...
கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 7-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு தாத்தா முறைகொண்ட முதியவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவர் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த ...
கோவை பக்கம் உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 70) இவர் கடந்த 2021-ம் ஆண்டு நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சுப்பிரமணியன் மகன் கருப்பையா என்ற வினோத் (25) என்பவர் மீது தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா ...
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லிக்கு பயணித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த நிலையில் திடீரென செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக ...
டெல்லி: ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு பூஜை போட்டு, தேங்காய் உடைத்தது யாரு, விஜய்தானே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவரிடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறுகையில், சகோதரர் விஜய் அவர்கள் ஒரு விஷயத்தை உணர வேண்டும். ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு திறப்புவிழா நடத்தியதே விஜய்தான். ...
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசை குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் ...
தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீட்பு பணிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெறுங்கைகளால் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மியான்மர் நாட்டின் சாகைங் நகரின் வடமேற்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் 11.50 ...