கோவையில் உள்ள வெற்றி லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43) இவர் பி.இ படித்து முடித்துவிட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது செல்போன் எண்ணுக்குவெளிநாட்டில் இருந்து ஒருபெண் தொடர்பு கொண்டு பேசினார்.அதில் பேசியவர் தனது பெயர் கீர்த்தி சிவசங்கரி என்றும் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தான் விரைவில் கோவை வர உள்ளதாக தெரிவித்தார்.தன்னிடம்நிறைய வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், விமான நிலையத்தில் அதை கொண்டு வர வரி செலுத்த வேண்டும்.நீங்கள் பணம் அனுப்பி வைத்தால் அந்த தொகையில் பாதியை உங்களுக்கு தந்து விடுகிறேன் என்று கூறினாராம். இதை நம்பிய அவர் ரூ 8 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயை 7 தவணைகளில் அனுப்பி வைத்தார்.பின்னர் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.