கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில் பவானி கதவணை மின்நிலையம் 2 உள்ளது. இங்குள்ள பவானி ஆற்றில் பிறந்த சில மாதங்களேஆன பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அந்த குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அந்த குழந்தையின் தாய் யார்? குழந்தை எப்படி இறந்தது ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது..
பவானி ஆற்றில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு..!
