உக்கடம் காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்..

கோவை உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள கார் பார்க்கிங் மைதானத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரவீதா உக்கடம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..