கோவை சிங்காநல்லூர் இருகூர் பக்கம் உள்ள அத்தப்பகவுண்டன் புதூர், பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் விவசாயி. இவரது மனைவி வசந்தி. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருதது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் 2 சிறுவர்கள் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே நந்தகுமார் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை பிடிக்க முன்றார். உடனே அதில் ஒரு சிறுவன் கையில் வைத்திருந்த பையுடன் வெளியே தயாராக நின்ற ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டான். ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவன் சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான்.. இதையடுத்து நந்தகுமார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர் . அவனுடன் வந்தது திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சுரேஷ் (வயது 20) ராமச்சந்திரன் மகன் இசக்கி பாண்டியன் ( வயது 21) மற்றொரு 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது அவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்திஒண்டிபுதூர் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுரேஷ் ,இசக்கி பாண்டி மற்றும் 17 வயது சிறுவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள் 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ், இசக்கி பாண்டியன் ஆகியோர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார்.
பட்டபகலில் துணிகரம்… வீடு புகுந்து நகை,வெள்ளி பொருட்கள் பணம் கொள்ளை – சிறுவன் உட்பட 3 பேர் கைது.!!
