கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் “டெர்மினல்” மானேஜருக்கு இன்று காலை 4 -02 மணி அளவில் ” இ.மெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய், “மெட்டல் டிடெக்டர் ” மூலம் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரிய வந்தது. கோவை விமான நிலையத்துக்கு கடந்த 3 மாதங்களில் 6 தடவை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் இன்று மதியம் 11 – 35 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்..