கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் பிரசாத் கண்ணன். இவர் இரவில் வேலை முடிந்து ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஒர்க்ஷாப் கதவை உடைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.