கோவை சுங்கம்- உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி சண்முகம் (வயது 58 )இவர் நேற்று மாலை 4-30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகன் வீட்டுக்குச் சென்று இருந்தார்.இரவு 8- 15 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், பணம் ரூ.40 ஆயிரம், இரோடாலர் 200, ஆஸ்திரேலியாடாலர் 500 , வெள்ளி நெக்லஸ், வெள்ளி கம்மல், ஆகியவற்றை யாரோ கொள்ளை அடித்து சென்று விட்டனர்.இவைகளின் மொத்த மதிப்பு ரூ 10 லட்சம் இருக்கும். .இது குறித்து சாந்தி சண்முகம் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள பீரோ மற்றும் கதவில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை,வெள்ளி, வெளிநாட்டு பணம் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை..!
