கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள விநாயகபுரம் , விளாங்குறிச்சி ரோடு சங்கரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 47) இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் 7பவுன் நகையை கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் தனது மனைவியுடன் திருச்செங்கோட்டில் நடந்த உறவினர் விட்டு திருமணத்திற்கு சென்று விட்டார்.நேற்று மாலைவந்து பார்த்தபோது வீட்டில் இருந்த செல்லம்மாளின் 7 பவுன் நகைகள், மற்றும் சிவக்குமாருக்கு சொந்தமான 23 பவுன் நகைகளையும் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.