திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் மணப்பெண் தூக்கில் தற்கொலை.. கோவை சுந்தராபுரம், மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது மகள் சரண்யா (வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையொட்டி அவரது பெற்றோர்கள் பல்லடத்தில்உள்ள பொங்காளி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து சரண்யாவுக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை. வீட்டில் வந்து பார்த்தபோதுபடுக்கை அறையில் சரண்யா நைலான் சேலையை மின்விசிறியில் கட்டி பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொன்னுசாமி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் மணப்பெண் தூக்கில் தற்கொலை..
