வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் ( வயது 38) சம்பவத்தன்று இவர்களது வீட்டில் பையில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து தங்கராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தன் வீட்டுக்கு தச்சு வேலைக்கு வந்த சக்தி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் .இது தொடர்பாக போத்தனூர் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.