கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஆர் .ஜி .புதூரைச் சேர்ந்தவர் கோமதி ( வயது 41) கடந்த 6-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டனர் . திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பணம் ரூ. 70 ஆயிரம், 2 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொளளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோமதி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
வீட்டின் பூட்டை உடைத்து பணம், தங்கம், வெள்ளி கொள்ளை..!
