கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு..!

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் அருள்மிகு. கொடுங்கலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் ரூ 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் – இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..